இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதால் நேரும் பாதிப்பு

இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தி வரும் இளம் பருவத்தினருக்கும், ஐடிய துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கும் புது வகையான நோய் தாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டு இளைய தலைமுறையினர் வரை ஏதோ சில தேவைகளுக்காக இணையதளத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

 

ஆனால், வாழ்வின் எல்லா தேவைகளுக்கும் இணையதளத்தையே இன்றைய இளைய தலைமுறையினர் நாடுவது மன ரீதியாக எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொடர்ந்து இணையத்தில் மட்டுமே தங்கள் நேரத்தை செலவு செய்வது மட்டுமல்ல.குறிப்பாக ஏதாவது நோய் வந்தால் அதற்கான காரணங்கள், மருந்து ஆகியவற்றை இணையத்தில் தேடுவதையே சைபர் காண்ட்ரியா என்கின்றனர். இது போல் , எதுக்கெடுத்தாலும் எந்நேரமும் இணையத்தில் மூழ்கி கிடப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார், மனநல மருத்துவர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குழு ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் ஐடித துறையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதில் குறிப்பாக 27 வயது முதல் 35 வயது வரை உள்ள எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஐடில துறையில் உள்ள அதிக வேலை பளு தான் காரணம் என்கிறார் புதிய ஜனநாயக ஊழியர் சங்கத்தின் ஐடிக பிரிவு ஆலோசகர்.

 

இன்றைய இளம் தலைமுறையினர் செல் ஃபோன் வாயிலாக இணையத்தில் செலவு செய்யும் நேரத்தை குறைத்துக் கொண்டு விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றின் மீது ஆர்வம் காட்டுவது அவசியம். ஐடிி ஊழியர்கள் அலுவலக வேலை முடிந்து வேலை திரும்பினால், குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.


Leave a Reply