மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட தேனி இளைஞர் தேர்வு

மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாட தேனியை சேர்ந்த ஒருவர் கை இல்லாத இளைஞர் தேர்வு ஆகியுள்ளார். தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பிறக்கும் போதே இடது கை இல்லாமல் ஊனத்தோடு பிறந்தவர். கால்பந்து மீதான ஆர்வத்தால் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு பல போட்டிகளில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச மாற்று திறனாளிகள் கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட பாலமுருகன் தேர்வு ஆகியுள்ளார். போட்டிக்கு பயிற்சி பெற அரசு உதவ வேண்டும் என்று பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச மாற்று திறனாளிகள் போட்டியில் பங்கேற்று இந்திய அணிக்கு கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார். இந்திய அணி சார்பில் பாலமுருகன் தேர்வு ஆகியிருப்பது தேனி கோட்டூர் கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply