கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்தால் தான் தொழிற்சாலைகள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இனிமேல் அனுமதி அளிக்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
புதிய குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என கூறினார். பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகவிடமிருந்து பெற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.