கிராப்புற குடியிருப்புகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி பள்ளமோர்குளம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகப் பணியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

 

தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்து பேசியதாவது; தற்போது நிலவி வரும் வரட்சி சூழ்நிலையால் மக்கள் பாதிக்காத வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .குடிநீர் வழங்க இயலாத குடியிருப்புகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் .

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சராசரியாக 35 கன மில்லியன் லிட்டர் ஊரக வளர்ச்சித் துறை மூலம், ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் 6.5 கன மில்லியன் லிட்டர் அளவிலும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 40 கன மில்லியன் விட்டர் அளவிலும் என பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது மேலும் தமிழக முதலமைச்சர் அவர்களை உத்தரவின்படி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத கிராம பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்திட ஏதுவாக ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

 

இராமநாதபுரம், திருப்புல்லானி, நயினார்கோவில், பரமக்குடி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 45 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீதம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக செயற்பொறியாளர் அயினான், உதவி நிர்வாக செயற்பொறியாளர் திருச்சி சண்முகநாதன், கென்னடி, உதவி பொறியாளர்கள் முத்து கிருஷ்ணன், வடிவேல், பாலசுப்ரமணியன் உட்பட அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply