பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை ஒட்டி வெளியிட்ட வீடியோ

2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதய ஆரோக்கியத்திற்கு யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாக கொண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜார்கண்ட் தலைநகரில் முதலமைச்சர் உட்பட 30,000 பேர் பங்கேற்கும் யோக நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று இரவே ராஞ்சி வந்து அடைந்தார். மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஏராளமான வி‌ஐ‌பிக்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். முன்னாதாக யோகாசனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் 2 வீடியோ பதிவுகளை மோடி வெளியிட்டுள்ளார். இதில் தியான நிலையில் மோடி அமர்ந்து இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தியானம் யோகாவின் முக்கியமான அம்சம் என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.


Leave a Reply