தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் விவசாயி ஒருவர் விவாசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி இருக்கிறார். தஞ்சையில் உள்ள ரமேஷ் தொழிற்பயிற்சியை முடித்தவர். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் குறைந்த செலவில் நாற்று நடுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். பிளாஸ்டிக் தட்டு, கிரைண்டர் பெல்ட், குழாய், ஊதுகுழல்,ஏசியில் பயன்படுத்தும் மோட்டார் உள்ளிட்டவற்றை கொண்டு ஒரு எந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
காகிதத்தில் நடவு நெல்லை 8 அங்குல இடைவெளியில் விழுமாறு செய்து பின்னர் அதனை காகித சுருளாக மாற்றுகிறார். ஊழுதவுடன் நேரடி நெல் விதைப்பு முறை போன்று காகிதத்தில் மடிக்கபட்டுள்ள நெல் நாற்றை கொண்டு நடவு பணியில் மேற்கொள்ளலாம் என்கிறார். 4200 ரூபாய் செலவில் நடவு பணியை மேற்கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.