சொகுசுக்காரில் கைத்துப்பாக்கி சிக்கிய விவகாரம் : 3 கேரள இளைஞர்கள் கைது

Publish by: --- Photo :


விருது நகரில் சொகுசுகாரிலிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யபட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த 18 ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு காரில் வந்த 3 பேர் காரை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 

காரை சோதனை செய்த பொது அதில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. காரின் பதிவெண் போலி என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். காரின் உண்மையான பதிவெண்ணை கண்டறிந்த காவலர்கள் அந்த காரின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

அவர் கொடுத்த தகவலின் பேரில் கேரளாவை சேர்ந்த அஜ்மல், சல்மான்,பைசல் ஆகியோர் கைது செய்யபட்டனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்லும் வழியில் கார் டயர்களை திருடி இருந்ததால் காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓடியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply