கஞ்சா வாங்குவதற்கு பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்

கன்னியாகுமரியில் இரு சக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த 4 இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்திய போது அவர்கள் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது.

 

அஜீத்,பகவதி நாதன், திவாகரன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ராயல் என்பில்ட்,பல்சர், உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா வாங்குவதற்கு பணம் கிடைக்காததால் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply