உசிலம்பட்டியில் மாணவ,மாணவிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தொடக்கப் பள்ளி

உசிலம்பட்டியில் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் புத்துணர்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருப்பதற்காக புதுமையான பயிற்சி அளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் சிரிப்பது, குட்டிக்கரணம் போடுவது என இரு விதிமுறைகளை கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

 

தோப்புக்கரணம் போடுவதால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் எனவும், இதே போன்று தினமும் சிரிப்பதால் மன உளைச்சல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்பட்டு, மாணவ மாணவியர் கல்வியில் நாட்டம் செலுத்துவார் எனவும், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு தெரிவித்துள்ளார்.


Leave a Reply