கோவில்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்திகொலை செய்த கணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்திரப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் சண்முகப்ரியா என்னும் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

 

மாரியப்பன் சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நேற்று இரவும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது கோவம் அடைந்த மனைவி சண்முகப்ரியா கத்தியை எடுத்து குத்தியதில் கணவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த கத்தியை பிடிங்கிய மாரியப்பன் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளான்.

 

இதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்துவிட கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply