வலிமையான எதிர்க்கட்சிகள் அவசியம்: பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளின் தங்களின் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் ஆக்கப்பூர்வமாக அவை நடவடிக்கைகளில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மக்களவை கூட்டத்தொடரின் முதல் நாளில் அவைக்கு செல்லும் முன்பு பிரதமர் மோடி கூறியதாவது: இந்த மக்களவை புதிய நண்பர்களையும் ,புதிய கனவுகளையும் பெற்றுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு அதிக பெண் எம்.பி.க்கள் கொண்ட அவை என்ற பெருமையையும் கொண்டுள்ளது எனக் கூறினார்.

 

ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி அவசியம். எனவே எதிர்க்கட்சிகளின் மதிப்பை அரசு உணர்ந்து உள்ளது என தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேர்மையான அணுகுமுறையை கையாள்வர் என நம்புவதாக மோடி தெரிவித்தார். நாட்டுக்கு சேவை செய்வதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் தங்களுக்கு அளித்து இருக்கிறார்கள் எனவும் கூறினார். மக்கள் நலனுக்காக கொண்டுவரப்படும் முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply