இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் படுகொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான அசோக்கை படுகொலை செய்த ஜாதி வெறியர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.

 

நேற்று (12.06.2019) இரவு சுமார் 9.00 மணியளவில் தோழர் அசோக் வேலைக்கு செல்லும் போது, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் தொடர்ச்சியாக நடத்தி வரும் ஜாதி வெறியர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. அசோக்கை இழந்து வாடும் அவரது குடும்த்தினருக்கு ஜனநாயக மக்களை எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

 

எனவே : அசோக்கை படுகொலை செய்த கும்பலை உடனடியாக காவல் துறை கைது செய்ய வேண்டும் மெனவும் படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் மெனவும் உயிரிழந்த அசோக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Leave a Reply