நடிகர் சங்கத்தின் நில முறைகேடு வழக்கில் விஷால் நேரில் ஆஜர்!

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி\ அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை சங்கத்தின் தலைவராக இருந்த சரத் குமார், பொது செயலாளராக இருந்த ராதா ரவி உள்ளிட்ட நான்கு பேர் முறைகேடாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

 

இது குறித்து தற்போது நடிகர்\ சங்கத்தின் பொது செயலாளர் விஷால் காஞ்சிபுரம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஆனால் விசாரணை சரியாக நடைபெறவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தை நாட மூன்று  மாதத்தில் இறுதி வழக்கு தாக்கல் செய்ய குற்ற பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

 

இதனையடுத்து சரத்குமார் மற்றும் ராதாரவி மேல் வழக்கு பதிவு செய்த குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் இருவரும் ஆஜராக கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால் இது வரை அவர்கள் ஆஜராகி எந்த விளக்கமும் அளிக்கவில்லை . இதனால் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனால் 3 பைகள் கொண்ட ஆவணங்களுடன் விஷால் இன்று குற்றபிரிவு போலீசில் ஆஜராகி உள்ளார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Leave a Reply