தலைவர் ஆவதற்கான முழுத்தகுதியும் பாக்கியராஜ்க்கு உள்ளது! பாரதிராஜா

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதி ராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் அடுத்த தலைவரை நியமிக்க வடபழனியில் உள்ள கமலா திரையரங்குகளில் பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்தன.

 

கடந்த மூன்று முறையாக தலைவர் பொறுப்பில் இருந்த விக்ரமனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் தற்போது பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தலில் தனது சிஷ்யன் பாக்கியராஜ் வெற்றி பெற விரும்புவதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்து இருக்கிறார். தலைவர் ஆவதற்கான முழுத்தகுதியும் பாக்கியராஜ்க்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply