மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் ! இருவர் கைது

புதுச்சேரி அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததாக பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் மாமுல் வாங்கி கொண்டு அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனவும் ஆர்.டி. ஓ. ஆதாரத்துடன் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது.

 

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 4 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்களை மீட்ட போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர்.  மேலும் சங்கர் கணேஷ் மற்றும் அவரது பெண் தோழி லதா ஆகியோரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

கைது செய்யபட்ட சங்கர் கணேஷ் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக உள்ளவன். இதனிடையே லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர் தனசெல்வம் புதுச்சேரி ஆயுதப்படை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.


Leave a Reply