பெண்ணுக்கு பாலியல் தொல்லை! சரமாரியாக அடித்த மக்கள்

நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொது மக்கள் சரமாரியாக அடித்து போலிசீல் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் சுப்ரமணியம் என்பவர் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த ராம் பிரபு என்பவர் சுப்ரமணியனின் மனைவியிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசி தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடையின் பெயர் பலகையில் இருந்த சுப்ரமணியனின் மனைவியின் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சுப்ரமணியன் வேறொரு பெண் உதவியுடன் ராம் பிரபுவை கடைக்கு வரவழைத்துள்ளார். இதற்கு ஏற்றார் போல கடைக்கு வந்த ராம் பிரபுவை  பொது மக்கள் உதவியுடன் அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply