மோடி பொய்களாலும், விஷமாகவும், வெறுப்புணர்வாலும் நிரம்பியுள்ளார்! ராகுல் குற்றச்சாட்டு

Publish by: --- Photo :


பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரை பொய்களாலும், விஷமாகவும், வெறுப்புணர்வாலும் நிரம்பியிருந்ததாகவும் அவற்றை பரப்பும் வகையில் இருந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

கேரளாவில் இரண்டு நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தன்னை தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி மக்களுக்கு கொட்டும் மழைக்கு இடையே பயணித்து நன்றி தெரிவித்து வருகிறார். இரண்டாவது நாளாக இன்று வயநாடு மாவட்டம் கல்பெட்டா என்ற இடத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடியின் பிரச்சாரம் பொய்களாலும் விஷம் போல் தீங்கு விளை விப்பதாகவும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

 

ஆனால் அதே வேளையில் காங்கிரசின் பரப்புரை உண்மையையும், அன்பையும், பாசத்தையும் பரப்புவதாக இருந்ததென அவர் தெரிவித்தார்.  பிரதமர் நரேந்திரா மோடி பரப்புரையின் போது நாட்டில் மோசமான உணர்வுகளை தூண்டும் விதமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாட்டில் விஷத்தை பரப்புவர்களுடன் தேசத்தை பிளவுபடுத்த நினைப்பவர்களுடனும் கடுமையாக மோதியதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.


Leave a Reply