82,000 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை! செங்கோட்டையன் அறிவிப்பு

2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சுமார் எண்பத்து இரண்டாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவு தர வாய்ப்பு இல்லை என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததால் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும், ஏற்கனவே ஏழாயிரத்து ஐநூறு ஆசிரியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

 

2013,2014, 2017 ல் எழுதியவர்கள் எண்பத்து இரண்டாயிரத்து முந்நூற்றூ எழுபத்து இரண்டு பேர் எழுதி இருக்கிறார்கள். ஆகவே எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் தருவதற்க்கு நம்முடைய அரசின் மூலமாக வாய்ப்பு இல்லை. இருந்தாலும் கூட இப்போது தான் கூடுதலாக பள்ளிகளிலே எல்.கே.ஜி‌ , யு.கே.ஜி‌ வகுப்பறைகள் கொண்டு வந்து இருக்கிறோம். போன ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் அவ்வாறு சேர்க்கப்படும் போதுதான் இந்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும்.

 

ஏனென்று சொன்னால் இன்றைக்கு சர்ப்ளஸ் என்று சொல்லபடும் ஏழாயிரத்து எண்ணூறு ஆசிரியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். ஆகவே இதெல்லாம் நினைவில் கொண்டு தான் இந்த பணிகளை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றி ஆய்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


Leave a Reply