30 ரூபாய்க்காக அடித்து கொலை செய்யபட்ட இளைஞர்

சேலத்தில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறின் போது 30 ரூபாய்க்காக இளைஞர் அடித்து கொல்லபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அம்மா பேட்டை அருகே உள்ள சதீஷ் வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது விற்ற திலீப் குமாரிடம் மது பாட்டில் வாங்கியுள்ளார்.அப்போது சதீஷ் 30 ரூபாய் குறைவாக கொடுத்ததாக தெரிகிறது.இதனால் ஏற்பட்ட தகராறின் போது சதீஷ் அடித்து கொல்லபட்டு உயிரிழந்துவிட்டார். இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் சேலம் ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறை சமாதானம் செய்து வைத்தனர். இதற்கு காரணமானவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Leave a Reply