மின்வாரியத்தில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறித்த அதிமுக அரசு

Publish by: எம்.ராஜா --- Photo :


அதிமுக அரசின் தவறான கொள்கைகளால் பறிபோகும் பலஆயிரம் வேலை வாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து திருப்பூர் மாவட்ட தொமுச அறிக்கை.

 

தமிழகத்தில் கடந்த 2016 ம் ஆண்டு தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது அதில் குறிப்பாக வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் உள்ள இளைஞர்களும் தமிழக அரசு பணியில் அமர்த்தலாம் என்பது தான். இது குறித்து திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ஈ.பி.அ.சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்போது ஆளுகின்ற அதிமுக அரசு தொடர்ந்து தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்து வருகின்றது. குறிப்பாக மின்வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யாமல் காலம் கடத்தி வந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணிநிரந்தர ஆணை பெற்ற பிறகும் தற்போது வரை அதிமுக அரசு பணிநிரந்தரம் வழங்க வில்லை.

 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவசரமாக தமிழக வரலாற்றில் இல்லாத கேங்மேன் என்ற பதவியை உருவாக்கி அதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து தமிழக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தது இது திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஸ்டேடஸ் கோ தடை ஆணை பெறப்பட்டது .

 

இந்த நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சியாக 29 -05- 2019 புதன்கிழமை அன்று தமிழக முதல்வர் தமிழ்நாடு மின்வாரியத்தில் 325 நபர்களுக்கு ( ஏ இ ) உதவி மின் பொறியாளர் பதவிக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை வழங்கப்பட்டது அதில் முதல் கட்டமாக 5 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

 

இதில் ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா உட்பட பல வெளி மாநிலத்தை சேர்ந்த 25 நபர்கள் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது.
தற்போதைய அதிமுக அரசு கடந்த 2016 ம் ஆண்டில் செய்த திருத்தம் என்பது தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பணியில் சேரலாம் என்பது என்று மாற்றம் செய்தனர் அதேபோல் நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்து பணியில் சேரலாம் என்றும் மாற்றப்பட்டது அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

 

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது.அதிமுக அரசு அதன் அடிப்படையில் தான் தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று பல லட்சம் இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவியாய் தவித்து வரும் இந்த சூழ்நிலையில்,தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் தட்டி பறித்து வெளி மாநில இளைஞர்களுக்கு வழங்கிய அதிமுக அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

தமிழக அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று உடனடியாக தமிழக அரசு பணியில் வெளி மாநில இளைஞர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும்அதேபோல் ஆந்திரா, கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங்கள் அந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது தமிழ்நாட்டில் அதிமுக அரசின் தவறான கொள்கைகளால் தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

 

எனவே இனிமேலும் காலம் கடத்தாமல்உடனடியாக மத்திய மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்தி தமிழக அரசு பணிகளில் தமிழக இளைஞர்களை மட்டுமே பணிகளில் அமர்த்த வேண்டும்.ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த நிலையை மாற்றிட முடியும். இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம். இப்போது மின்வாரியத்தில் நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் இதே நிலை ஏற்படும் என்பதால் தமிழக வேலை தமிழருக்கே கோசம் தமிழகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்.

 

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் பல லட்சம் பேர்கள் இருக்கும் போது அதிமுக அரசு தொடர்ந்து தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கும் படித்த இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக தமிழக இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக செயல் படுவதை விட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு படி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய முன் வரவேண்டும். அதேபோல் தமிழக அரசு பணிகளில் தமிழக இளைஞர்களை மட்டுமே பணிகள் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply