மார்ட்டின் லாட்டரி காசாளர் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

Publish by: மகேந்திரன் --- Photo :


லாட்டரி தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில் வருமானவரித் துறை விசாரணைக்கு ஆஜரான மார்ட்டின் நிறுவனத்தின் காசாளரான பழனிசாமி, காரமடை அருகேயுள்ள குட்டையில், கடந்த 3ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து அவரது பிரேத பரிசோதனை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஈர்த்து உடலில் காயங்கள் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டிற்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரை கொண்டு, வரும் 28ம் 24- தேதி மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply