மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த வனத்துறை.

பொள்ளாச்சி அருகே உள்ள செமணம்பதியில் மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளியை வனத்துறையின் கைது செய்தனர்.

 

பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து ,பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.இதில் செம்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (48 ),மாரப்பக் கவுண்டன்புதூரை சேர்ந்த தமிழரசன் (38 ),பெரியபோதுவை சேர்ந்த சுந்தர்ராஜ் ( 51 ), கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்த பிரகாஷ் (29) மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த துரைசாமி (62 )ஆகியோர் வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது.

 

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கடந்த 5ம் தேதி பாலகிருஷ்ணன் , சுந்தர்ராஜ்,பிரகாஷ், துரைசாமி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மான் வேட்டையாடிய வழக்கில் மாரப்பகவுண்டன்புதூரை சேர்ந்த தமிழரசன்(47) தலைமறைவில் இருந்துவந்தார். தமிழரசனை தேடிவந்த வனத்துறையினர் தமிழரசனை கைது செய்தனர்.தமிழரசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வேட்டையில் தொடர்புடையை மாரப்பகவுண்டன்புதூரை சேர்ந்த கணேசன்(35), காளிமுத்து(எ)கனகராஜ்(55) ஆகியோரையும் கைது செய்தனர்.

 

இதுகுறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தமிழரசன் ஏற்கனவே யானையை தந்தத்திற்காக வேட்டையாடி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். தற்போது வெளியில் வந்து மீண்டும் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.மேலும், மான், முயல், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை கிலோ ஒன்றிற்கு ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை செய்துள்ளனர்.

 

கேரளாவை சேர்ந்த பலர் இறைச்சியை விலைக்கு வாங்கிச்சென்றுள்ளனர்.வன விலங்கு இறைச்சியை விலைக்கு வாங்கிச்சென்றவர்களின் முகவரிகளையும், விரங்களையும் சேகரித்துவருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்யவுள்ளோம்.தமிழகத்தை சேர்ந்த சிலரும் இறைச்சியை வாங்கியுள்ளனர். அவர்களையும் கைது செய்யவுள்ளோம்.இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பொள்ளாச்சி நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Leave a Reply