சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி.. ஆந்திராவை அதிர வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..

ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

 

ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களை பிடித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் வரும் 30-தேதி, ஆந்திரா முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். அவரது கட்சியினரின் கொண்டாட்டம் இன்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

இதனிடையே கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜெகனின் வீட்டுக்கு சென்ற திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர். அத்துடன் மாநிலத்தின் மூத்த ஐ.ஏஎ.ஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஜெகன்மோகனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

 

இதனிடையே நாளை ஒய்.எஸ்.ஆர் கட்சி எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைத்து ஜெகன்மோகனை முதலமைச்சராகவும் சட்டப்பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்ய உள்ளன.


Leave a Reply