நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? ‘சென்னை பிரியாணி’ துவக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், பிரியாணி சுவையில் தனி முத்திரை பதித்து வரும் ‘சென்னை பிரியாணி’ ஓட்டல் துவக்க விழா நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இக்குழுமத்தின் கோவை முதல் கிளையை, நடிகர் பார்த்திபன், நடிகை நிக்கி கல்ராணி மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் தாமு ஆகியோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

 

 

இதை தொடர்ந்து, மூவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அந்தந்த பகுதிகளுக்கென தனி சுவை கொண்டது பிரியாணி. தற்போது கோவைவாழ் பிரியாணி பிரியர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது சென்னை பிரியாணி. தரமும் சுவையில் தன்னகத்தே கொண்டிருப்பதால், இது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்றார்.

 

தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், அரசியலில் நடிகர்கள் தற்போது அதிகம் ஈடுபடுகின்றனர். நடிகர்களும் சாதாரண மனிதர்கள்தான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் ஈடுபட்டு சேவை செய்யலாம் என்று தெரிவித்தார்.

 

முன்னதாக சென்னை பிரியாணி ஓட்டல் உரிமையாளர் சஞ்சய், அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் கோவை முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply