அரசியல் பணிகளில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு! கலாம் ஆலோசகர் பொன்ராஜுடன் ஆலோசனை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நடிகர் ரஜினிகாந்துடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்; இதில் அரசியல், நதிநீர் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக, நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். எனினும், பேட்ட, அதை தொடர்ந்து தற்போது தர்பார் என படப்பிடிப்புகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தர்பார் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த, பொன்ராஜுடன் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

 

ரஜினியின் வீட்டில், இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நீடித்தது. நண்பர் என்ற அடிப்படையில் ஆலோசனை நடத்தியதாக, பின்னர் நிருபர்களிடம் பொன்ராஜ் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை, குடிநீர் பிரச்சினை, நதிநீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றி இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து வந்தாலும், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply