கமலஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு! தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!!

இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று, தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் பேசியிருந்தார். பெரும் சர்ச்சையையும், பலரது எதிர்ப்பையும் சந்தித்துள்ள இந்த விவகாரத்தில் கமலஹாசனுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, பாரதிய ஜனதா வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

 

தமிழகத்தில் கமலஹாசன் பேசியுள்ள நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி இருக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.


Leave a Reply