அரசியலை விட்டே விலகத் தயார், ஆனால்… மு.க. ஸ்டாலின் ஆவேச பேட்டிக்கு இதுதான் காரணம்!

பாரதிய ஜனதா தலைவர்களுடன் திமுக பேசிவருவதாக கூறுவதை நிரூபித்தால், அரசியலை விட்டே விலகத் தயார் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று அளித்த பேச்சியில், எங்கள் கட்சியுடன் திமுக தொடர்பில் இருக்கிறது. பதவி பசிக்காக மு.க. ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

 

காங்கிரஸ் அணியில் இடம் பெற்றுள்ள திமுக, மூன்றாவது அணி தொடர்பாக சந்திரசேகர ராவுடன் ஆலோசனை நடத்தி இருந்தது. இந்த சூழலில் பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியது, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

 

இந்த நிலையில், தமிழிசை அளித்த பேட்டி குறித்து திமுக தலைவர் ஸ்டாலி கூறியிருப்பதாவது: பாரதிய ஜனதாவுடன் நான் பேசியதாக நிரூபித்தால், அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன். அவ்வாறு நிரூபிக்க தவறினால் தமிழிசையும், பிரதமர் மோடியும் அரசியலைவிட்டு விலகத்தயாரா உள்ளார்களா?

 

மோடியை கடுமையாக விமர்சித்தது மட்டும் இன்றி அவர் மீண்டும் பிரதமராகக்கூடாது என தேர்தல் பிரசாரம் செய்து வந்தேன். அத்துடன், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் திமுக இரட்டிப்பு உறுதியுடன் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும் திமுக உறுதியாக உள்ளது.

 

பொய்யான தகவலை பேட்டியில் தெரிவித்ததன் மூலம் தமிழிசை, தனது தரத்தை தாழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிமுக – பாரதிய ஜனதா போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சி திமுக அல்ல என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply