2 லாரிகள் நேருக்குநேர் மோதி் விபத்து! ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கோவை அருகே, ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

 

சேலம் – கொச்சி புறவழிச்சாலையில், கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. பெங்களூருவில் இருந்து கோவைக்கு பழங்களை ஏற்றி வந்த லாரியும், சேலம் நோக்கி வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி சென்ற லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துள்ளாகின.

 

 

இதில், இரண்டு லாரிகளும் பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் உருண்டு ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே விழுந்தன. இந்த விபத்தில், வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி சென்ற, கேரள மாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் ஓட்டுநர் ஜெயஸ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

பழலாரி ஓட்டுநர் ராகவேந்திரா, லாரியில் இருந்து குதித்ததால், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் இரண்டும் ரயில்வே தண்டவாளத்தில் விழாமல் சற்று தள்ளி விழுந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Leave a Reply