பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் தான் ஓ.பி.எஸ்! சூலூர் பிரசாரத்தில் ஒரேபோடு போட்ட டிடிவி தினகரன்!!

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட்டாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று, சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

 

கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 19இல் நடக்கிறது. தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சூலூரில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவ்வகையில், அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மாலை மாதப்பூர்,தொட்டிபாளையம்,சோமனூர் பேருந்து நிலையம்,சூலூர் உள்ளிட்ட 12 இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். டிடிவி தினகரன் பேசியதாவது:

 

 

ஓ. பன்னீர் செல்வத்தை, முதலமைச்சாராக அமர வைத்து அழகு பார்த்த சசிகலா. ஆனால், அவருக்கே தீங்கிழைத்த ஓ.பி.எஸ். எவ்வாறு மக்களுக்கு நல்லது செய்வார். அவர், பாஜகவின் ஏஜெண்ட். ஆட்சியை தக்க வைக்க, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். நல்லவேளை நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்ததை எங்கு வேண்டுமானால் எடுத்துக்கொ ள்ளலாம் என மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முற்படுகிறது மத்திய அரசு. இதுபோன்ற தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஏஜெண்டாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

 

 

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால்,உண்மையான நீதிபதியான மக்கள், தங்கள் தீர்ப்பை ஆர்.கே நகர் போல எங்களுக்கு வாக்களித்து நிரூபிப்பார்கள். தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, தனது கொங்கு மண்டலத்தை வஞ்சித்து வருகிறார். துரோகத்தை கொங்கு மண்டல மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பேசினார்.

 

 

முன்னதாக டிடிவி தினகரனை வரவேற்கும் விதமாக பெண்கள் , கட்சி சின்னமான பரிசுப்பெட்டகம் காட்டி அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதேபோல், எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு மட்டுமின்றி பல்வேறு திரைப்பட பாடல்களுக்கும் கலைஞர்கள் நடனமாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.


Leave a Reply