காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, வேறு நாட்டு கொடியை இந்திய தேசியக்கொடி என்று பதிவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசங்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில்உ ள்ள 59 தொகுதிகளுக்கு, நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, டெல்லியில்வாக்களித்தார். பின்னர், தனது விரலை காண்பித்து, செல்பி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.
அந்த பதிவில், கவனக்குறைவாக இந்திய தேசியக்கொடிக்கு பதில், பராகுவே நாட்டு தேசியகொடியை பதிவிட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும், இந்திய கொடி கூட தெரியாத ராபர்ட் வதேரா என்று கிண்டல் செய்தனர்.
இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ராபர்ட் வதேரா, என் இதயத்தில் இந்தியா இருக்கிறது.பராகுவே நாட்டு கொடியை பயன்படுத்தியது, எனது கவனக்குறைவால் நடந்த தவறு. இதை நீங்கள் சர்ச்சையாக்க முடிவு எடுத்து விட்டால், அதை நான் பொருட்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.