உலகத்தரத்தில் கல்வி தரும் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி! அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில் திறப்பு விழா!!

உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் ஸ்கூல் திறப்பு விழா, விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் ஆர்.சசி ராஜ்குமார், தலைமை தாங்கினார். அறங்காவலர் ரவிக்குமார், முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆண்டனி, வரவேற்று பேசினார்.

 

எம்மதமும் சம்மதமே என்பதை உணர்த்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையிலும், மேட்டுப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்கு தந்தை ஜேக்கப், காரமடை அரங்கநாதர் கோவில் அர்ச்சகர் திருவேங்கடம் மற்றும் சி.டி.சி. பள்ளிவாசல் மவ்லவி அக்பர் ஆகியோர், ரிப்பன் வெட்டி, ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளியை திறந்து வைத்தனர்.

 

 

அதை தொடர்ந்து, சுபா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர் .ஒயிட் ஈகிள் டிரஸ்ட் சார்பில், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 50 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை, நிர்வாக அறங்காவலர் சசி ராஜ்குமார், அறங்காவலர் ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.

 

அதை தொடர்ந்து, பிரி.கேஜி முதல், எட்டாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஏராளமான பெற்றோர், ஆர்வமுடன் தங்களது குழந்தைளுடன் இதில் பங்கேற்று பள்ளியில் சேர்த்தனர். விழா முடிவில், பி.ஆர்.ஓ. பூரணி நன்றி கூறினார்.


Leave a Reply