ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடையா? மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம், ராகுல் இந்தியர் தான் என்றும் தெரிவித்துள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருப்பதாகவும், அந்நிறுவனத்தின் ஆவணங்களில் தன்னை இங்கிலாந்து குடிமகன் என ராகுல் குறிப்பிட்டுள்ளதாகவும், சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம், ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இதற்கிடையே, இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளதாக ராகுல் காந்தியே குறிப்பிட்டுள்ளதால் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட தடை விதிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

 

காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்ற உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி இந்தியர் இல்லை என்று கூறுவதற்கு அடிப்படை முகாந்திரமே இல்லை என்றும் கருத்து தெரிவித்தது.


Leave a Reply