வேல் மருத்துவமனை- பிரீத்தி மருத்துவமனை இணைந்து வெளிநோயாளிகள் புதிய பிரிவு தொடக்கம்!

இராமநாதபுரத்தில், வேல் மருத்துவமனையும் மதுரை பிரீத்தி மருத்துவமனையும் இணைந்து வெளிநோயாளிகளுக்கான புதிய பிரிவை தொடங்கியுள்ளன.

 

மதுரை பிரீத்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ஜ், இராமநாதபுரம் வேல் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு தொடக்க விழா நடந்தது. இந்திய மருத்துவ கழக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கலியுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். டாக்டர் மலையரசு வரவேற்றார்.

 

விழாவில், மதுரை பிரீத்தி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது: மதுரை பிரீத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு துரித சேவை அளிக்கும் பொருட்டு, எங்கள் விரிவான சேவையை வெளிநோயாளிகள் பிரிவாக இராமநாதபுரத்தில் துவங்குவதில் மகிழ்கிறோம்.

 

மதுரை பிரீத்தி மருத்துவனையில் மூட்டு மாற்று, இரு தயம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மருத்துவ கவனிப்பை இராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் உள்ள பிரீத்தி மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் தொடரலாம். பிரீத்தி மருத்துவமனைக்காக இனிமேல் மதுரை செல்லத் தேவையில்லை என்றார்.

 

விழாவில், டாக்டர்கள் சின்னதுரை அப்துல்லா, சகாய ஸ்டீபன் ராஜ், ஜோசப் ராஜன், பாரூக், சுப்ரமணியன், விநாயகமூர்த்தி, சரவணன், ரவிச்சந்திரன், முகமது ஹியாவுதீன், சாதிக் அலி, ஞானக்குமார், கார்த்தியாயினி, மனோஜ்குமார், சசிகுமார், ரவிகுமார், சிவகுமார், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply