மதிமுக வெள்ளிவிழா ஆண்டு சிறப்பு ரத்த தான முகாம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கா. மகேந்திரன்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 26ஆம் ஆண்டு தின விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பாக, இரத்ததான முகாம் நடைபெற்றது.

 

கடந்த 1993 ஆம் ஆண்டு, தி.மு.க.வில் இருந்து வெளியேற் வைகொ, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினர். மதிமுகவின் 25ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 26ஆம் ஆண்டு ஆரம்ப விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

அதன் ஒருபகுதியாக, அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்யப்பட்டது. இதில் மதிமுக தொண்டர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். மதிமுக இராமநாதபுரம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


Leave a Reply