ஆட்சியில் இருந்த போது இளைஞர் வேலைவாய்ப்புக்கு ஸ்டாலின் செய்தது என்ன? முதல்வர் பழனிச்சாமி கேள்வி!

மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மு.க.ஸ்டாலின் பெற்று தந்தார் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

 

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், இங்கிதம் தெரியாமல், மரியாதை கூட தெரியாமல் தேர்தல் பிரசாரங்களில் எல்லை கடந்து பேசுகிறார். அயோக்கியத்தனம் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தியாவில் சிறந்த உள் கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். திமுக 14 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, ஸ்டாலின் எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தார்?

 

மத்தியில் அங்கம் வகித்தபோது தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்க திமுக வழிவகை செய்யவில்லை; மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிப்பதுபோல், இப்போது எங்களை குறை கூறுகிறார்.

 

இவ்வாறு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.


Leave a Reply