‘ஸ்டாலின் நிச்சயம் ஜனாதிபதி ஆவார்’! பொசுக்குன்னு துரைமுருகன் ஏன் இப்படி சொன்னார்?

ஸ்டாலினுக்கு ஜனாதிபதி ஆகும் தகுதிகள் உள்ளன; அதற்கான வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

 

தேர்தல் முடிவுகளுக்கு பின், தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கனவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், அவர் ஜனாதிபதி ஆவார் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

 

தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துரைமுருகன், தமிழகத்தில் மு.க. ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் யாருமில்லை. அதனால், அடுத்த 25 ஆண்டுகளில் அவர் நம் நாட்டின் ஜனாதிபதியாக வரும் தகுதியும் வாய்ப்பும் கூட அவருக்கு இருக்கிறது.

 

இந்த மக்களவை தேர்தலில், ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று முதலில் கைகாட்டியது ஸ்டாலின் தான். அதனால் தன, பிரதமர் மோடியா? ராகுலா? என விவாதமே எழுந்தது. அவர் ராகுல்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டால் இந்த விவாதமே வந்திருக்காது.

 

ஸ்டாலினை தலைகுனிய வைக்கமாட்டோம் என்று, தாய் மீது சத்தியம் செய்து, திமுக தொண்டர்கள் களத்தில் பணியாற்ற வேண்டும். திமுகவில் உள்ள உட்கட்சி பூசல்களை தேர்தல் முடியும் வரை மறந்துவிட வேண்டும். தேர்தலுக்கு பிறகு நானே, குரூப் பாலிடிக்ஸை உருவாக்கி தருகிறேன் என்று வழக்கமான கலகலப்புடன் துரைமுருகன் பேசினார்.

 

மு.க. ஸ்டாலினை எல்லோரும் முதல்வராக முன்னிருந்த்து வரும் வகையில், அடுத்த 25 ஆண்டுக்கு பிறகு ஸ்டாலின் ஜனாதிபதி என்று துரைமுருகன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply