சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல், மார்ச் 29 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதை, ஏறத்தாழ 27 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவு, நேற்று வெளியாகும் என்று செய்தி வெளியானது; இதை சி.பி.எஸ்.சி. நிர்வாகம் மறுத்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதில் 91. 1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டைவிட 4.40% அதிகமாகும். 99.85% பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது.
அதேபோல், 99% பெற்று சென்னை மண்டலம் இரண்டாமிடம் பெற்றுள்ளது. 74.49% பெற்று, குஜராத் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. தேர்வு முடிவுகளை https://t.co/HTKPmMj6rS, https://t.co/fIXO0rmQPj என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியவர்களில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.