திமுக தான் தொழிலாளர் காவலாளி; மோடி அல்ல! தூத்துக்குடி மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

 

உழைப்பாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தூத்துக்குடியில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது. அதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

 

தற்போது ஆட்சியில் உள்ள மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்குகின்றன. நாட்டில் உள்ள 45 கோடி தொ ழிலாளர்களின் உரிமையை, பெருநிறுவனங்களிடம் பிரதமர் மோடியின் அரசு அடகு வைத்துவிட்டது.

 

தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல. மே 23 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், இதற்கு விடிவுகாலம் வரும். மே 1ஆம் தேதி, ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் என்று ஸ்டாலின் பேசினார்.

 

 

இந்த மே தின சிறப்பு பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி, மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மே தின நினைவுச்சின்னத்தில் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.


Leave a Reply