தங்கம் வென்ற கோமதிக்கு ரூ. 15 லட்சம்! ஆரோக்யராஜுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் அதிமுக

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று, அதிமுக அறிவித்துள்ளது.

 

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டி, 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்.

 

அவருக்கு, அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த தமிழக வீரர் ஆரோக்கிய ராஜ்க்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

 

வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகையாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply