சொன்னா நம்பமாட்டீங்க… மோடியின் கையிருப்பு ரூ.38,750 தானாம்! சொந்தமாக கார், பைக் இல்லை!!

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவில் கையிருப்பு ரூ.38,750 மட்டுமே இருப்பதாகவும், கார், பைக் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

 

வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 2.51 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 1.41 கோடி; அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1.1 கோடி. கையிருப்பு ரூ. 38,750 ரொக்கம் உள்ளது. சொந்தமாக 45 கிராம் தங்கம் உள்ளது. அவரது அசையா சொத்து குஜராத் காந்திநகரில் உள்ள அவருடைய சொந்த வீடு மட்டுமே.

 

மோடியின் பெயரில் வங்கி கடன் எதுவும் இல்லை. அவர் யாருக்கும் பணம் தர வேண்டிய தேவையும் இல்லை. பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி பெயரில் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் புதியதாக பதிவு செய்யப்படவில்லை என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply