அனுமதியின்றி கடலில் வீடு கட்டி தம்பதி விவகாரம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபணமானால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தாய்லாந்தின் கடற்கரை நகரம் புக்கெட்டில், அந்த நாட்டு கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து, 12 மைல் தொலைவில் கடலில் சிமெண்ட் தொட்டி மிதப்பது போல் தெரிந்துள்ளது.
ஆச்சரியப்பட்ட கடற்படை வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது தான் அது வீடு மாதிரி தெரிந்தஹ்டு. அதில் யாரும் வசிக்கவில்லை. இது குறித்து பின்னர் விசாரித்தபோது அமெரிக்காவை சேர்ந்த பிட்காயின் முதலீட்டாளரான சாத் எல்வர்டோஸ்கி மற்றும் தாய்லாந்தை சேர்ந்த அவரது காதலி சுப்ரானி தெப்ட் ஆகியோர் கடலில் இந்த வீட்டை கட்டி வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
தாய்லாந்தின் இறையாண்மையை மீறியதாக, இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.