தமிழகத்தில் கோடைமழை இன்றும் தொடர வாய்ப்பு! வருண பகவான் கருணை உங்க ஏரியாவில் இருக்குமா?

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, உள்கர்நாடகா முதல், கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு கோவையில் மழை பெய்தது. அதேபோல் சேலம், பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில்  மழை பெய்தது.  காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply