ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சாா்பில் டிஎஸ்பி -க்கு வாழ்த்து

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பரத், திருச்செந்தூர் தாலுகாவில் பொதுமக்கள் கொடுக்கும் நியாயமான புகார் மனுக்களுக்கு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இவரது உண்மையான பணியை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.ஆசிம் அக்ரம் மற்றும் நிர்வாகிகள் பலரும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பரத்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Leave a Reply