ஆண்டிப்பட்டியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு! பணப்பட்டுவாடா புகாரால் அ.ம.மு.க. அலுவலத்தில் பரபரப்பு

ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடா தொடர்பாக சோதனை நடத்த முயன்ற போது தடுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அ.ம.மு.க அலுவலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்கு வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்த போலீஸார் சென்றனர்.

அவர்களை, அ.ம.மு.கவினர் தடுத்ததை அடுத்து பதற்றம், மோதல் சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் இதில் யாருக்கும் காயமில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Leave a Reply