ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ஆனந்த் இன்று திருவாடானை சின்னகீரமங்கலம் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். கைகாட்டியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி வரவேற்றார்கள். ஆனந்த் கூறுகையில் என்னை வெற்றி வெற்றி பெறச் செய்தால் குடிநீர் பிரச்சினை கண்டிப்பாக போக்கவும், தேர்தல் களத்தில் நிற்கின்ற வேட்பாளர்களில் நான் உள்ளுர் என்பதால் என்னை எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். அதன் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை செய்ய நான் தயாராக உள்ளேன் என்றும் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஆயிரக்கணக்கான மக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Leave a Reply