தமிழகத்தில் தொடரும் வருமான வரித்துறை அதிரடி! சென்னை, நாமக்கல் உள்பட 11 இடங்களில் சோதனை

சென்னையில் நிதி நிறுவன அதிபர் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தேர்தல் பறக்கும் படையின் வாகனச் சோதனை மட்டுமின்றி, சந்தேகப்படும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அண்மையில் வேலூரில் இத்தகைய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியது.

 

இந்நிலையில் சென்னை, நாமக்கல் உள்பட 11 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நிதி நிறுவன அதிபரின் வீடுகளில் சோதனை நடக்கிறது. ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் சுஜா ரெட்டிக்கு சொந்தமான நெல்லை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

இதே போல் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலும் பிஎஸ்கே நிறுவனத்துக்கு தொடர்புடைய 3 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.


Leave a Reply