தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டத்தில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் நடிகை குஷ்பு ஆவேசமாக அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..
பிரபல தமிழ் நடிகை குஷ்பு, அரசியலில் தடம் பதித்த பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக உள்ளார். மக்களவை தேர்தல் பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைமை குஷ்புவை கண்டு கொள்ளவில்லை. இதனால் இங்கு பிரசாரம் எதுவும் செய்யாமல் பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பெங்களூரு மத்திய தொகுதியில் குஷ்பு பிரச்சாரம் செய்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் பின்னால் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், குஷ்பூவின் பின்புறமாக சீண்டியுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த குஷ்பூ, ஆவேசமாக திரும்பி அந்த தொண்டரின் கன்னத்தில் பளார் அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக குஷ்பு அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.