பா.ம.க.வில் இருந்து முக்கிய நிர்வாகி ‘ஜூட்’! தேர்தல் நேரத்தில் ராமதாஸ், அன்புமணிக்கு ‘ஷாக்’

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக, அந்த கட்சியில் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பா.ம.க. வெளியில் இருந்து பார்த்தால் பிரமிப்பாக இருந்தது. ஆனால், உள்ளே போய்  பார்த்தால் தான் ஒன்றுமில்லை என்று தெரிகிறது. வன்னியர் சமுதாயத்தையும்,  பிற சமுதாயத்தையும்  அந்த கட்சி தலைமை அடகு வைத்துவிட்டது.

 

 

மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதியின் பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள்.  ஆனால், அங்கு மட்டுமின்றி எல்லா தொகுதிக்கும் நான் பிரசாரத்திற்கு சென்றபோது, மக்கள் மோசமாக பேசினார்கள். அது பொறுக்காமல் இப்போது விலகுகிறேன்.

 

பொதுவாக பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டேன் என்றார்.

 

மக்களவை தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணியை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply