ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற  தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,916 வாக்குச்சாவடி மையங்கள், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 302 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மக்கள் அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 792 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில்  பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ள 140 வாக்குச்சாவடி மையங்கள், இதில் அடங்கும் என்றார்.

 

இக்கூட்டத்தில் தேசிய தகவல் மையம் அலுவலர் (பொ) பழனிவேல்ராஜா, உதவி மகளிர் திட்ட அலுவலர்  விக்னேஷ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-மகேந்திரன், ராமநாதபுரம்.


Leave a Reply