இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு தமிழக துணை முதல்வர், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்,
ஓ பன்னீர்செல்வம் கூட்டணி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் இதில் துணை முதல்வர்
ஓ பன்னீர்செல்வம் பிரச்சார வாகனத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது அதிமுகவை ஸ்டாலினால் அசைக்கக்கூட முடியாது. துணை முதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்தார் மேலும்
மக்களிடம் வேஷம் போடும் ஸ்டாலினால் அதிமுகவை அசைக்க முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தாமரை மலர்ந்தால் மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்கள், மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களை வாக்காளர்கள் எடை போட்டு பார்க்கும் தேர்தல் இது. பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜ., வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். மத்திய அமைச்சரவையில் 10 ஆண்டு அங்கம் வகித்த திமுக., தமிழக வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களை நிறைவேற்றவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்க முழு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அவரது மறைவிற்கு பிறகும் அவர் வகுத்த மக்கள் நல்வாழ்வு திட்டங்களை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறோம்.
1972ல் தொண்டர்கள் இயக்கமாக எம்ஜி ஆர் தோற்றுவித்த அதிமுகவை அவரது மறைவிற்கு பிறகு
பல்வேறு சூழ்ச்சிகள் செய்து கருணாநிதி அழிக்க நினைத்தார். சதிகளை முறியடித்து ஜெயலலிதா கட்டிக்காத்த ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. விவசாயி போல் தலைப்பாகை, கடைகளில் சென்று டீ குடிப்பது போல் தேர்தல் வெற்றிக்காக வேஷம் போடும்
ஸ்டாலின் , நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக., காணாமல் போய்விடும் என ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுகவை ., ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது.
யாராலும் தொட்டு பார்க்க முடியாத எஃகு கோட்டையான அதிமுக சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் அசைக்க முடியாது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. மத்திய அரசு நிதி ரூ.1,500 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய அரசு நிதியில் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்வு உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்கள் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 200 கிராம விவசாயிகளுக்கு ரூ.174.6 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள 179 கிராம விவசாயிகளுக்கு ரூ.281.6 கோடி ஒரு வாரத்தில் வழங்கப்படும்.என்றும் பொதுமக்களிடம் குழப்பமற்ற முறையில் பொது மக்களிடம் குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டு குழப்பத்தில் வெற்றி காணும் நோக்கத்துடன் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அள்ளி வீசினாா்.
இதில் பயிர் காப்பீட்டு திட்டம் இன்சூரன்ஸ் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என்று கூறியது மக்கள் மத்தியில் என்ன பேசுவதென்று தெரியாமல் இந்த வாக்கு சேகரிப்பில் எந்த ஒரு தமிழக நலன் கருதி வாக்குறுதிகளும் உறுதி செய்யாத வண்ணம் இவரது பேச்சு அமைந்துள்ளது என்று
மக்கள் மத்தியிலும் பொதுமக்களிடமும் எதிர்பார்ப்பையும் மீறி ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பேசாமல் ஒரு எதார்த்தமான ஏதோ கூட்டணி கட்சி வேட்பாளருக்கு கடமைக்கு வாக்கு சேகரித்தது போல் இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்றது இதனால் இங்கு வந்த பொதுமக்கள் பல்வேறு கேள்விகளுடன் முனுமுனுத்து சென்றனர். இந்த இராமநாதபுரம் மாவட்ட குறை நிறைகளை அறிந்து வாக்குறுதிகளை அளிக்காமல் ஏதோ கடமைக்கு வந்து விட்டு செல்வதாக கழக பெண்கள் மனவேதனை அடைந்தனர். உடன் வந்த அமைச்சர் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இந்தத் தொகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைக்காததின் காரணமோ என்னவோ என்று பேசிக்கொண்டன